இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (22) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றது. இன்னும் டி20 உலகக் கிண்ணத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைவான காலமே இருக்கும் வேளையில் இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆதலால் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாகவே இந்த ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.மேலும்
இவ் ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க தலைமையில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை டி20 அணித் தலைமை பொறுப்பில் இருந்து அசலங்க நீக்கப்பட்டபோதும் டி20 போட்டிகளுக்கு அதிக அவதானம் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஒருநாள் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் எனினும் இலங்கை அணி வலுவான குழுவை கொண்டே இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் டி20 போட்டிகளுடன் ஒப்பிடுகையில் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி அண்மைக் காலத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி ஆடிய 28 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 17 இல் வெற்றியீட்டி இருப்பதோடு 9 போட்டிகளிலேயே தோல்வியை சந்தித்தது.அதுமட்டுமன்றி இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணியை 26 தடவைகள் ஒருநாள் போட்டிகளில் எதிர்கொண்டிருக்கும் இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றியீட்டி 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு ஆண்டுகளின் பின்னரே ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் இலங்கை அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2023 ஒக்டோபரில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திலேயே சந்தித்தன.
அதேபோன்று ஏழு ஆண்டுகளின் பின்னரே இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணி ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. கடைசியாக இங்கு இங்கிலாந்து ஒருநாள் போட்டி ஒன்றில் 2018 ஒக்டோபரில் ஆர். பிரேமதாச மைதானத்திலேயே ஆடி இருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு இலங்கை ஆடுகளம் அதிகம் பரீட்சமற்றதாக உள்ளது இலங்கைக்கு சாதகமானதாக மாற்ற முடியும்இன்றைய போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுவதால் பிற்பகல் 2.30 மணிக்கே ஆரம்பமாகின.மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கைக் குழாம் நேற்றே (21) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது,சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிசங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பவன் ரத்னாயக்க, தனஞ்சய டி சில்வா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெள்ளாலகே, வனிந்து ஹசரங்க, ஜெப்ரி வென்டர்சே, மஹீஷ் தீக்ஷய, மிலான் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், எசான் மாலிங்க ஆகியோரே கலத்தில் விளையாட உள்ளனர்