2011 அனர்த்தத்துக்குப் பின் மீண்டும் திரும்பும் ஜப்பானின் அணு மின் நிலையங்கள்
உலகின் மிகப்பெரிய அணு உலையான புக்குஷிமா மின் உற்பத்தி நிலையத்தை ஜப்பான் மீட்டு இயக்க ஆரம்பித்துள்ளது. இவ் உலையானது கிட்டத்தட்ட 15ஆண்டுகளின் பின் இயங்க ஆரம்பிக்கப்படுள்ளது. மேலும்
டோக்கியோவின் வட மேற்கே அமைந்திருக்கும் கஷிவசாக்கி கரிவா ஆலையின் 6 ஆம் இலக்க உலை நேற்று இயக்கப்பட்டது. இதன் எச்சரிக்கும் முறை செயலிழந்ததால் ஒரு தினம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டதோடு இதன் வர்த்தக செயற்பாடுகள் அடுத்து மாதத்தில் இருந்து ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஜப்பானின் அணுசக்தி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் அண்மைய முயற்சியாகவே உள்ளது. எனினும் இந்த செயற்பாட்டுக்கு இன்னும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது. இதன் 7 ஆவது உலை 2030 வரை செயற்பாட்டுக்கு திரும்பாது என கூறப்பபட்டுள்ளது. மேலும் இவ் நிலையானது ஜப்பானில் 2011 இல் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதே காரணம் ஆகும்.