ICC T20 உலகக் கிண்ணப் போட்டி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பம்.
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ICC T20 உலகக் கிண்ணப் போட்டி 2026ஆம் ஆண்டிற்கன உத்தியோகபூர்வ உலகக் கிண்ண உலா வை(Trophy Tour), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.கிரிக்கெட் இரசிகர்கள் இந்த உலகக் கிண்ணத்தை நேரில் கண்டு மகிழ்வதற்காக 21முதல் 24ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படவுள்ளது.மேலும்
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை T20 அணித் தலைவர் தசுன் ஷானக்க, தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போது இரசிகர்கள் கிண்ணத்தைப் பார்வையிடலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவ் கிண்ணமானது தொடர்ந்து கண்டி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் மக்கள் பர்வையிடவும் புகைப்படங்கள் எடுக்கவும் முடியும் என அறிவுக்கப்பட்டுள்ளது.மேலும் இவ் உலகக் கிண்ணப் போட்டியானது பெப்ரவரி 07 தொடக்கம் மார்ச் 08 வரை நடைபெற இருக்கின்றது. போட்டியில் பங்கேட்குக்கும் நாடுகளாக இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும். மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற மொத்தமாக 20நாடுகள் பங்கேகின்றன.இலங்கையில் மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறும்.
இறுதிப் போட்டி பாகிஸ்தான் அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கையில் நடைபெறும் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்,மேலும் இலங்கையில் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்கள் மற்றும் போட்டிகளின் எண்ணிக்கை வருமாறு,
ஆர். பிரேமதாச மைதானம் (கொழும்பு): 08 போட்டிகள்.
பல்லேகல சர்வதேச மைதானம் (கண்டி): 07 போட்டிகள்.
SSC மைதானம் (கொழும்பு): 05 போட்டிகள்.
2012ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை நடத்தும் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் இதுவாகும். இத்தொடரின் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் பெரும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டு அணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையினால் அந்நியச் செலாவணி அதிகரிப்பதுடன், ஹோட்டல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய மற்றும் நீண்டகால வேலைவாய்ப்புகளும் உருவாகும்.