இன்றைய வானிலை அறிக்கை
இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேலும் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும் வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்புட்டுள்ளது. மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது, காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் எனவும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும்
மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கி.மீ. வேகம் வரை அதிகரிக்கலாம், எனவும் இவ் கரையோர பிரதேசத்திட்கு அப்பாற்பட்ட பகுதிகள் சில வேலைகளில் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளது. மேலும் வருகிற வெள்ளிக்கிழமையில் இருந்து தற்போது உள்ள வரட்சியான காலநிலை மாறும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.