2026ஆம் ஆண்டில் 3 இலட்சத்தை கடந்த இலங்கை சுற்றுலாப் பயணிகள் வருகை

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தச் சபையின் தகவலின்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்தவர்கள் இந்தியப் பிரஜைகள் ஆகும். அவர்களின் எண்ணிக்கை 57,348 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானியப் பிரஜைகள் 34,724 பேரும், ரஷ்யப் பிரஜைகள் 30,951 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனிய நாடிலிருந்து 20,272 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 16,315 சுற்றுலாப் பயணிகளும் இலங்கையைச் சுற்றுலா தலமாகத் தேர்வு செய்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக,பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660