மத்துகம வீதியோரக் கால்வாயில் 41 வயது நபரின் சடலம் கண்டெடுப்பு

மத்துகம அகலவத்த பிரதான வீதியில் உள்ள தெல்கஸ் சந்திப் பகுதியிலுள்ள வீதியோரக் கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர், இத்தேபன மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரென ஆரம்ப விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில், குறித்த சடலம் நாகொட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மத்துகம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660