இன்றைய வானிலை

வடக்கு,கிழக்கு,வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பகல் 1மணிக்கு பின்னர் பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேலும்

மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில், மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று அவ்வப்போது வீசக் கூடும். இதன் காரணமாக, குறித்த கடல் பிராந்தியங்கள் சில வேளையில் கொந்தளிப்பாக காணப்படும்.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், அந்த நேரங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.ஆகவே பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வேளைகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


📌 WhatsApp Group:

https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP

📢 WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K

👍 Facebook Page:

https://www.facebook.com/share/1CGgrzvf4y/

🌐 Website: https://eastmirror.lk

👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!


Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660