மண்சரிவு அபாயம் நீடிப்பு: மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்
மழை வீழ்ச்சி குறைந்திருந்தாலும், மண்சரிவு அபாயம் இன்னும் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.கடந்த நவம்பர்–டிசம்பர் மாதங்களில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன. சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்னெச்சரிக்கை மாவட்டங்கள்:
பதுளை: லுணுகலை, மீகாககிவுல, வெலிமடை, கந்தகெட்டிய, ஹாலி எல், பதுளை, ஊவா பரணகம, பஸ்ஸறை
கண்டி: மினிப்பே, உடுதும்பறை
மாத்தளை: வில்கமுவ, உக்குவெல, அம்பகங்கா கோரளை, ரத்தோட்டை, லக்கல, பல்லேகம
நுவரெலியா: நில்தண்டாஹின்ன, வலப்பனை, மதுரட்ட, ஹங்குரன்கெத்த
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம், மழை நிலையை கவனித்து எப்போதும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!