திஹாரி இமானியா அரபுக் கல்லூரியின் 4ஆம் பட்டமளிப்பு விழா கோலாகலம்
திஹாரி இமானியா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா இன்று (08) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் மௌலவி சைபுல்லா நிலாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 85 மௌலவிமார்கள் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் கௌரவத் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டதாரிகளை வாழ்த்தினார். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, முஜீபுர் றஹ்மான், அம்ஹர் மௌலவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்.இவ்விழா, இஸ்லாமிய கல்வியின் வளர்ச்சிக்கும், சமூகத்திற்குத் தேவையான ஆன்மிகத் தலைமைத்துவத்தை உருவாக்கும் முயற்சிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.