நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை
இன்று நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை முன்னறிவிப்பு அமைப்பு தகவலின் படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது மேலும்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை குறைக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக,
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வீட்டுக்குள் இருத்தல்,மரங்களுக்கு அடியில் இருப்பதை தவிர்த்தல்.
நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிகளை விட்டு விலகல்.
கம்பி தொலைபேசிகள் மற்றும் மின் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தாமை.மேலும் மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்த்தல்.மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் விழக்கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருப்பது.அவசர உதவிக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுதல்.மின்னல் அபாய நிலை மாறும் வரை பொது மக்கள் இந்த முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறது.