உள்நாடு
Jan 31, 2026
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்துடன் இளைஞர் கைது
நேற்று வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட நிலையிலும் இருந்த ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.மேலும்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.