ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியவர் கைது
கரையோர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர், கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கமைய
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்றே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.