67,800 ஆண்டுகள் பழமையான சிவப்பு நிறக் கைச் சித்திரம் இந்தோனேசியாவில்.
இந்தோனேசியக் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவப்பு வண்ணச் சித்திரம் உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.இவ் ஓவியமானது சுலாவெசியில் உள்ள முனா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 67,800 ஆண்டுகளுக்கு முன்னர் அது வரையப்பட்டிருக்கலாம் என்று நேச்சர் சஞ்சிகையில் வெளியான விஞ்ஞான கட்டுரை குறிப்பிட்டுள்ளது.மேலும் இவ்
குகைச் சுவரில் பதியப்பட்ட கையின் ஓவியத்தில் சில விரல்கள் அழுத்தமாக பதிந்துள்ளன. சுலேவெசியின் பிரத்தியேக பாணி அது எனக் கருதப்படுகிறது. அதிநவீன ஒளிக்கற்றை உத்தி கொண்டு ஆய்வாளர்கள் இந்த ஓவியத்தை ஆராய்ந்தனர்.இது போன்ற கைச் சித்திரங்கள் ஸ்பெயினில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவை சுமார் 15,000 ஆண்டுக்கு முன்னர் வரையப்பட்டதாய் ஆய்வுகள் கூறுகின்றன.மேலும் இவ் ஓவியமானது ஆசியாவிலிருந்து இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவுக்கு மனிதர்கள் குடிபெயர்ந்ததற்கான குறிப்புகளை அந்தக் கண்டுபிடிப்புகள் காட்டுவதாய் நிபுணர்கள் கூறினர்.மேலும் இவ் சித்திரத்தை வரைந்தவர்கள் பழங்குடி அவுஸ்திரேலியர்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்