கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தின் 3ஆவது தளம் உத்தியோகபூர்வ திறப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் (ECT) 3ஆவது நேற்று உத்தியோகபூர்வமாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இவ் செயற்ப்பாடானது துறைமுகத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.மேலும்

இந்த நிகழ்வில் Maersk, CMA CGM மற்றும் MSC போன்ற உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இவர்களின் வருகையானது கொழும்பு துறைமுகத்தின் நம்பகத்தன்மை மற்றும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சி மீது சர்வதேச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் குறிப்பாக, முனையத்தின் உற்பத்தித்திறன் மற்றும் கப்பல்கள் கையாளப்படும் வேகம் குறித்து அவர்கள் தமது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.இவ் நிகழ்வில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க (ஓய்வுபெற்ற) கருத்து தெரிவிக்கையில்,2025 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையாத நிலையிலும் இந்த முனையம் 5 இலட்சத்திற்கும் அதிகமான (500,000 TEUs) கொள்கலன்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது எனக் குறிப்பிட்டார். தற்போது மூன்றாவது தளம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியத் துணைக்கண்டம் மற்றும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் ஒரு பிரதான பரிமாற்ற மையமாக கொழும்பு துறைமுகம் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் இந்த பெப்ரவரி நடுப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் எனவும், அதன் பின்னர், அனைத்து செயல்பாட்டு அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த ஆண்டில் 15 இலட்சம் (1.5 million) TEU கொள்கலன்களைக் கையாளும் இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆகவே இந்த வளர்ச்சியானது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டுதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதார மதிப்பு உயரும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660