வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை குறித்து ஆராய்ச்சி.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இதற்கான செயன்முறையை அமைப்பதற்கான முயற்சிகளின் முதல் கட்டமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள்,சிவில் சமூக அமைப்புகள்,இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரகங்களிடமிருந்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் அரசாங்கம் கேட்டுள்ளது மேலும் இதற்கான அறிக்கை ஒன்றை அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட குழு வௌியிட்டுள்ளது. இவ்வாறு வௌிநாடுகளிலிருந்து வாக்களிக்க விரும்பு வோர் தமது விருப்பங்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்குமாறும் இக் குழு கேட்டுள்ளது. மேலும் இதற்குத் தேவையான சட்ட மற்றும் நடைமுறை சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்க இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பதிவு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் விளம்பரம், வாக்களிக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்தும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்காக தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்து திருத்தங்களை முன்மொழிய சிறப்புக் குழுவை நியமிக்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.இருந்த போதும் இவ் சட்டம் தற்போது இலங்கையின் தேர்தல் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன் குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660