2027ல் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் அறிமுகம்
வருகிறவருடம் முதல் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும்
அதற்கிணங்க,இதனுடன் சம்பந்தப்பட்ட 19,000 ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இவ் விடயத்தை ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச பராமரிப்பாளர் மாநாட்டின்,எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எனும் ஒன்று கூடலின், இறுதி அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறியது சிறுவர் பராமரிப்பு என்பது ஒரு தனிப்பட்ட சுமை அல்ல. அது அரசாங்கம் மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன்,முன் பிள்ளைப்பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஸ்டெப்-அப் தொடர்பாடல் திட்டம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரை முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டுகால திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.