கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் நெரிசல், அவசர நடவடிக்கைகள் முன்னெடுப்பு

துறைமுகத்தில் உருவாகியுள்ள கொள்கலன் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக உடனடி மற்றும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளின் காரணமாக துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள கொள்கலன் தேக்க நிலையை குறைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. துறைமுக நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற விசேட ஆலோசனைக் கூட்டத்தின் போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.மேலும்

தற்போது கொழும்பு துறைமுகத்தில் சுமார் 8,000 கொள்கலன்கள் தேக்கமடைந்துள்ளன எனவும் உரிய காலத்தில் தேவையான அனுமதிகள் பெறப்படாததே இந்த நிலை உருவாகக் காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள புளுமெண்டல் களஞ்சிய முனையத்திற்கு ஆபத்து எனவும் குறைவான கொள்கலன்களை மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், சுங்கத்துறை அதிகாரிகளின் முழுமையான கண்காணிப்பின் கீழ் அனுமதி வழங்கும் செயல்முறைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660