மஞ்சள் மணல் பரப்புப் போலக் காட்சியளிக்கும் கிழக்கு சசெக்ஸ் கடற்கரை

ஆயிரக்கணக்கான உருளைக்கிழங்கு சிப்ஸ் (French fries) பாக்கெட்டுகளாலும் வெங்காயங்களாலும் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) கடற்கரைப் பகுதி நிறைந்து காணப்படுகிறது.இது இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது.

இதற்கு காரணம் இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட கடும் புயலின் போது, லொம்போக் ஸ்ட்ரெய்ட் (Lombok Strait) என்ற சரக்குக் கப்பலில் இருந்து 17 குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் (refrigerated containers) கடலில் தவறி விழுந்தது ஆகும். மேலும் அங்கு வசிக்கும் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) ஜோயல் பொன்னிசி என்பவர் இவ்வாறு கூறியுள்ளார்,

கடந்த வாரம் புதன்கிழமை முதல் வெங்காயப் பைகள் கரையில் ஒதுங்கத் தொடங்கியதாகத் தெரிவித்தார். சனிக்கிழமை அன்று தனது துணையுடன் நடைப்பயணம் சென்றபோது, கடற்கரை முழுவதும் சிப்ஸ் பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் தொலைவில் இருந்து பார்க்கும்போது, அந்தப் பகுதி ஒரு வெப்பமண்டலத் தீவின் மஞ்சள் நிற மணல் பரப்புப் போலக் காட்சியளித்தது, எனவும் அவர் விவரித்தார். இவ் கழிவுகளானது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்றும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன எனவும் மேலும் பிளாஸ்டிக் ஃப்ரீ ஈஸ்ட்போர்ன்(Plastic Free Eastbourne) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு, கடல் நாய்கள் (Seals) மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை ஜெல்லி மீன்கள் எனத் தவறாகக் கருதி உண்ண வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, சிப்ஸ் பாக்கெட்டுகள் சிதறிக் கிடக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே 20 முதல் 30 கடல் நாய்கள் வாழும் பகுதி அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதனை

Pசுத்தப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் இந்தப் பணியில் இணைந்துள்ளனர். பிரைட்டன் மற்றும் ஹோவ் (Brighton and Hove) நகர சபை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் மட்டும் கடற்கரையிலிருந்து சுமார் 1.9 தொன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இது வழக்கமாகச் சேகரிக்கப்படும் கழிவுகளை விட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது, ‘பிராண்ட் மரைன்’ (Brand Marine) என்ற மீட்பு நிறுவனம், கப்பல் உரிமையாளர் சார்பாக பிரித்தானிய கடலோர காவல்படையுடன் இணைந்து கொள்கலன்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தும் வருகிறது.


Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660