உள்நாடு
Feb 11, 2026
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பெப்ரவரி 18 வரை காவலில்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் தேதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், அவரை மேலதிகமாக காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.