உள்நாடு
Feb 09, 2026
மலபொதுஆர பகுதியில் சாலை விபத்து குடும்பத்தை உலுக்கிய சம்பவம்
உடவளவ தனமல்வில வீதியில் அமைந்துள்ள மலபொதுஆர பகுதியில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில், 13 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியோரமாக நடந்து சென்ற சிறுவனை மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த சிறுவன், உடனடியாக உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பில், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடவளவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.