கங்காராமய விகாரையில் புத்த பகவானின் புனித சின்னங்கள் விசேட காட்சியில்
கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையில், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பகவானின் புனித சின்னங்கள் இன்று காலை முதல் பொதுமக்கள் தரிசிப்பதற்காக விசேடமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய தரிசனத்துக்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தரும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விகாரை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று காலை 6.00 மணி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7.00 மணி வரை, பக்தர்கள் இந்த புனித சின்னங்களை நேரில் சென்று பார்வையிடவும், வழிபடவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் பக்தர்களின் வசதிகளை கருத்தில் கொண்டு, விசேட கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இவ் நிகழ்வு, இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையிலான மத மற்றும் பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகவும் கருதப்படுகிறது.