புத்தளம் மாவட்டத்தில் 78வது சுதந்திர தின விழா சிறப்புடன் நிறைவு பெற்றது

இலங்கை 78வது சுதந்திர தினத்தை இன்று (04) புத்தளம் மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியது. மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புத்தளம் மாவட்டச் செயலகமும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரச மற்றும் அரச சார்பற்ற பல நிறுவனங்களும் இணைந்து ஒத்துழைந்தனர்.இந்த விழாவில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் கயான் ஜானக பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முஹம்மட் பைஸல், அஜித் கிஹான், புத்தளம் நகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு மத தலைவர்கள், போலீஸ், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.புத்தளம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் உயிரிழந்த பொதுமக்களுக்கு இருநிமிட மௌன அஞ்சலிலும் பங்கேற்றனர்.

நிகழ்வில், தமிழ், சிங்களம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. புத்தளம், கருவலகஸ்வௌ, ஆனமடுவ, பல்லம பகுதிகளில் உள்ள கலாச்சார மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், புத்தளம் இந்துக் கல்லூரி, சென். அன்ரூஸ் மத்தியக் கல்லூரி, ஆனந்தா தேசியப் பாடசாலை மற்றும் பாத்திமா மகளிர் கல்லூரி மாணவ மாணவிகள் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கலைப்படமாக நிகழ்த்தினர்.மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில், புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேசச் செயலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது. இதில், கிராம சேவகர் பிரிவுகளிலும் சிறப்பு விழாக்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிரமதானங்கள் இடம்பெற்றன.

இந்த விழா, மக்களுக்கு தேசிய சுதந்திரத்தின் மதிப்பையும், சமூக ஒற்றுமையையும் உணரச் செய்தது

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660