எகிப்து காசா ரஃபா எல்லைக் கடப்பு மீண்டும் திறப்பு
எகிப்து காசா எல்லையில் உள்ள ரஃபா எல்லைக் கடப்பு இன்று திங்கட்கிழமை (02) அதிகாரப்பூர்வமாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் காசாவில் இருந்து 50 பேரை வெளியேற்றவும், அதே சமயம் 50 பேர் தாயகத்திற்கு திரும்பவும் எதிர்பார்க்கப்படுகிறது என எகிப்திய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இன்று முதற்கட்டமாக பாலஸ்தீனியர்கள் குழு எல்லைக் கடப்பிற்கு வந்தடைந்ததாக அல்-கஹேரா நியூஸ் (Al-Qahera News) செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்
இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக முற்றிலும் மூடப்பட்டிருந்த ரஃபா எல்லைக் கடப்பின் பாலஸ்தீனப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை (01) முதல் சோதனை அடிப்படையில் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் சுமார் 50 பாலஸ்தீனியர்கள் காசாவிற்குள் நுழைவார்கள், அதே நேரத்தில் 150 நோயாளிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் அட்டையோரும் சிகிச்சைக்காக எகிப்திற்குச் செல்ல உள்ளனர்.
காசா சுகாதார அதிகாரிகள் மதிப்பீடு செய்யும் படி, எல்லைக் கடப்பு முழுமையாக திறக்கப்படும் போது சுமார் 22,000 நோயாளிகள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 2023-ல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே 2024 முதல் ரஃபா எல்லைக் கடப்பின் பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.