உள்நாடு
Feb 02, 2026
உள்ளூர் சந்தையில் இஞ்சி விலை கடும் உயர்வு
உள்ளூர் சந்தையில் இஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு கிலோ இஞ்சி ரூ.300 முதல் ரூ.500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதே அளவு இஞ்சி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலான விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக டித்வா புயல் தாக்கத்தால் இஞ்சி பயிர்கள் கடுமையாக சேதமடைந்ததையே வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக, சந்தையில் பச்சை இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.இந்நிலை தொடர்ந்தால், எதிர்வரும் நாட்களில் இஞ்சி விலை மேலும் உயரக்கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவுத்து உள்ளனர்.