உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் இலங்கை இவ் வருடம் பெற்றுள்ளது.

ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) ஆன உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய இலங்கைக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடம் காலி நகருக்குக் கிடைத்துள்ளது. மற்றும் அந்த அறிக்கையில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும்

இவ்வறிக்கைக்கு அமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த முதல் இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடமாக மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.கடந்த வருடம் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660