உள்நாடு
Jan 15, 2026
இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு,ஜனவரி 16 முதல் நடைமுறை
பொதுமக்களுக்கு நிவாரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க அரசு தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த புதிய விலைக் குறைப்பானது ஜனவரி 16 முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி,
1 கிலோகிராம் எடையுள்ள இறக்குமதி பால் மா பொதியின் விலை ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.