இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது பணிக்காலத்தை நிறைவு செய்து, ஜனவரி 16ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கா,இலங்கை உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க அவர் செய்த பங்களிப்பிற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைக்கு அவர் வழங்கிய ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் தலைமைத்துவம் வழங்கியிருந்தார்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு-