வாசித்ததில் பிடித்தது
Jan 13, 2026
தூரம்
ஆகாயத்தில் பறக்கும்
விமானங்கள்
இந்த மூன்றாவது மாடியின்
மேல் தளத்திலிருந்து
பார்க்கும் போது
அவ்வளவு பக்கத்தில் தான் பறந்து செல்கிறது கை நீட்டினால்
தொட்டுவிடலாம் என்பதுபோல
ஆனால்
அது அவ்வளவு பக்கமல்ல
உனது இருக்கைக்கும்
எனது இருக்கைக்கும் நடுவே இருப்பது ஒரு சிறிய மேஜையும்
ஒரு சிறிய தேனீர் மட்டுமே.
ஒரு புன்னகையால் அதைக்கடந்துவிடலாம்
என்பதுபோல......
-அந்நிய நிலத்தின் பெண் -