அமெரிக்க தூதுவரின் அனுபவம், இலங்கைக்கு கிடைத்த உலக அங்கீகாரம்
நீர்ச்சறுக்கல் விளையாட்டிற்கு இலங்கை சிறந்த இடமாக திகழ்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்,நான் கலிபோர்னியாவில் பிறந்தவளாக இருந்தாலும், இதற்கு முன்பு ஒருபோதும் நீர்ச்சறுக்கல் விளையாடியதில்லை. ஆனால் எனது பயத்தை தள்ளிவைத்துவிட்டு முதன்முறையாக இலங்கையில் நீர்ச்சறுக்கல் அனுபவத்தை பெற்றேன். எனக்கு பொறுமையுடன் பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் ஒரு தூதுவராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்து, நீர்ச்சறுக்கல் பயிற்சிகளைப் பெற விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதி உலகின் சிறந்த நீர்ச்சறுக்கல் இடங்களில் ஒன்றாகும் எனவும் பாராட்டியுள்ளார்.அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பகிர்ந்துள்ள இந்த அனுபவம், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு, குறிப்பாக தென்னிலங்கை கடற்கரைப் பகுதிகளுக்கு கிடைத்துள்ள ஒரு முக்கியமான சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!