கல்வித் துறையை அரசியல் லாபத்திற்காக சீர்குலைக்க விடமாட்டோம்- சமன்மலி குணசிங்க

தரம் 6ற்கான பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சை அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது

எம்.பி. சமன்மலி குணசிங்க. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6-ஆம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடத் தொகுதி (Module) குறித்து பரப்பப்படும் கருத்துக்கள் உண்மையை பிரதிபலிப்பதல்ல என்றும், அவை முழுமையாக அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் தவறான பிரச்சாரங்களாகும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், இந்த பாடத் தொகுதியின் மூலம் நாட்டின் மாணவர்களுக்கோ அல்லது கல்வித்துறைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார். சிலர் தங்களது குறுகிய அரசியல் இலக்குகளுக்காக இந்த விவகாரத்தை தவறாக விளக்கி, சமூகத்தில் அச்சமும் குழப்பமும் உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த விடயத்தை முன்னிட்டு பிரதமரை குறிவைத்து முன்வைக்கப்படும் தரமற்ற விமர்சனங்களையும் அறிக்கைகளையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும், அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக நாட்டின் பெண் சமூகத்தை விழிப்புணர்வூட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவசியமானால் ஜனநாயக முறையில் வீதியில் இறங்கவும் தயங்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்கமான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களை அரசியல் லாபத்திற்காக சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க இதன்போது வலியுறுத்தினார்.


📌 WhatsApp Group:

https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP

📢 WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K

👍 Facebook Page:

https://www.facebook.com/share/1CGgrzvf4y/

🌐 Website: https://eastmirror.lk

👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660