கிளிநொச்சியில் பயங்கர சாலை விபத்து
கிளிநொச்சி முரசுமோட்டை A35 பிரதான வீதியில் இன்று (12) இடம்பெற்ற பேருந்து,கார் நேருக்கு நேர் மோதல் விபத்தில், காரில் பயணித்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி வந்த காரும், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுவுள்ளது.விபத்தின் போது காரில் சிக்கியிருந்த இருவரின் உடல்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!