களவாடப்பட்ட துப்பாக்கியுடன் நான்கு பேர் கைது

களவாடப்பட்ட துப்பாக்கியுடன் நால்வரும் தாயும் கைது

கடந்த 2026.01.01ம் திகதி இரவு வனஜீவராசிகள் திணைக்கள புனானை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வாழைச்சேனை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல் விசாரணையின் போது திருட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்கள புனாணை பிராந்தியக்காரியாலயம் உடைக்கப்பட்டு திணைக்கள பயன்பாட்டிற்கென இருந்த துப்பாக்கி (Shot Gun) மற்றும் காரியாலய உபயோகப்பொருட்களும் களவாடிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திருட்டுச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜறுள் அவர்களின் வழிகாட்டலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட. தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்தக திருட்டுச்சம்வத்துடன் தொடர்புடைய நால்வரும் தாயொருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் களவாடப்பட்டு, கைப்பற்றப்பட்ட துப்பாக்கி (Shot Gun) மற்றும் ஏனைய அலுவலகப்பொருட்களுடன் நேற்று (11) வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று சந்தேக நபர்களும் சந்தேக நபர்கள் இருவரின் தாயும் குடும்ப உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் சந்தேக நபர்களைக்கைது செய்வதற்கு உதவிய பொதுமக்களுக்கும் வாழைச்சேனை பொலிஸார் நன்றி தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக போதை வியாபாரிகள் மற்றும் திருட்டுச்சம்பவ்ங்களுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருவதுடன், வாழைச்சேனை பொலிஸாரின் தொடர் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660