புத்தர் சிலை விவகாரம் கைது செய்யப்பட்ட பிக்குகள் பிணையில் விடுவிப்பு
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் ஐந்து சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.குறித்த ஒன்பது பேரும் இன்று (11) திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இவ் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலையில் உள்ள விகாரையொன்றில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, சிலையை அகற்ற பொலிஸார் முயற்சி செய்தபோது, பிக்குகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தச் சம்பவத்தையடுத்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது