சம்பள உயர்வுக்கு நன்றி தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்,ஜனாதிபதியுடன் நேரடி கலந்துரையாடல்
இன்று காலை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.ஜனாதிபதி அப்பகுதிக்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். குறிப்பாக, அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பள உயர்வுக்காக தொழிலாளர்கள் தமது நன்றியையும் தெரிவித்தனர்.இந்தச் சந்திப்பின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சில தொழிலாளர்கள், எங்களின் சம்பளத்தை உயர்த்தியதுடன், எங்கள் பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி இவர்தான் எனக் கூறி தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், வாழ்வாதார சவால்கள், வேலைநிலைகள் மற்றும் சமூக வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பு, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் கவனத்தை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.