நிட்டம்புவ தாக்குதல் சம்பவம், நீண்டகால விசாரணைக்கு பின் நீதியின் வெற்றி
இன்று (11) கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், 12 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, நிட்டம்புவ பகுதியில் முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 42 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கின் நீண்டகால விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், கடந்த ஜனவரி 14ஆம் தேதி வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.மேலும் இவ்
தீர்ப்பு அறிவிக்கப்படும்போது, அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாக இருந்தனர். நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தபோது, 12 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மரண தண்டனை விதித்தனர்.இந்த தீர்ப்பு, 2022 மே மாத வன்முறைகள் தொடர்பான முக்கியமான சட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், மீதமுள்ள பிரதிவாதிகள் தொடர்பான நடவடிக்கைகள் சட்ட நடைமுறைகளின் படி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.