ஓமான் ரோயல் கடற்படை கப்பல் சாத் இலங்கைக்கு விஜயம்

ஓமான் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான ‘சாத்’ எனப்படும் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (10) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையின் பாரம்பரிய நடைமுறைகளுக்கிணங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 75 மீட்டர் நீளமுடைய இந்தக் கப்பல், லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீன் சவுத் அப்துல் ரஹ்மான் ஏ.ஐ. பலுஷி அவர்களின் தலைமையில் பயணிக்கிறது.

இந்த விஜயம், இலங்கை மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான தொழில்முறை ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வு மற்றும் நல்லெண்ண உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில், அதிலுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொழும்பு நகரில் உள்ள முக்கிய சுற்றுலா மற்றும் கலாசார தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660