ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளராக ஷனொன் கௌலின் நியமனம்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய பணிப்பாளராக ஷனொன் கௌலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

26 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவம் கொண்ட ஷனொன் கௌலின், அதில் 13 ஆண்டுகள் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பணியாற்றியுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வலுசக்தி, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் உணவு நீர் பாதுகாப்பு ஆகிய துறைகளுடன் தொடர்புடைய முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை வகுப்பில் அவர் விரிவான அனுபவம் பெற்றுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் மங்கோலியாவுக்கான வதிவிடப் பிரதிநிதித்துவத்தின் பணிப்பாளராக அவர் சேவை புரிந்துள்ளார். அங்கு அவர் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை வழிநடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆசிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கு முன்பு, அமெரிக்காவின் தேசிய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆய்வகத்தில் மேலாளராக பணியாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில், அமெரிக்கா இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு முயற்சிகளை அவர் முன்னெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ADB வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவரது அனுபவமும் தலைமைத்துவமும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660