உள்நாடு
Feb 09, 2026
புதிய களனி பாலம் அருகே வசித்த நபர் போதைப்பொருளுடன் கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள சிறிபாலபிந்து மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 25 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒருவரை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபர் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய நபர் எனவும், அவர் புதிய களனி பாலம் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.