உள்நாடு
Feb 07, 2026
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்திற்கு முடிவு?பெப்ரவரி 17ல் விவாதம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம், எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சட்ட திருத்தங்களை முன்னெடுப்பதே அரசின் நோக்கமாகும் என்றும், குறித்த சட்டமூலம் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.