மூதூர் நெய்தல் நகரில் 78வது சுதந்திர தின விழா
நமது நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) புதன்கிழமை, மூதூர் நெய்தல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஹிழ்று ஜும்மா பள்ளியில் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, அருகிலுள்ள நான்கு பாலர் பாடசாலைகளை இணைத்து நடத்தப்பட்டது. இவ் நிகழ்வை ஹிழ்று ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம், நெய்தல் நகர் பிரஜா சக்தி அமைப்பு, சமூக நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, பாலர் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலைகளில் இருந்து தேசியக் கொடியை ஏந்தி வீதியினூடாக நடைபயணம் மேற்கொண்டு, விழா நடைபெறும் ஹிழ்று ஜும்மா பள்ளி வளாகத்தை சென்றடைந்தனர். இந்த நடைபயணம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
விழா ஆரம்பத்தில், ரவ்லதுல் ஜன்னா அரபுக் கல்லூரி மாணவரின் கிராஅத் ஓதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பின்னர், தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு விழா உத்தியோகபூர்வமாக துவங்கியது.
இந்த விழாவில், ஹிழ்று ஜும்மா பள்ளி நிர்வாகத்தினர், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமூக நிறுவனங்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரப்புரிமையாக பங்கேற்றனர். நிகழ்வு சிறப்பாக மற்றும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டதை மக்கள் பெருமையுடன் பாராட்டினர்.