உள்நாடு
Feb 03, 2026
நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். திணைக்களத்தின் அறிவித்தலின் படி, அவர் அங்கு ஆஜராகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பும், நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அவர் நாட்டில் இல்லாத காரணத்தால், விசாரணைக்கு பிறிதொரு திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார். இதனையடுத்து, அன்றைய அறிவித்தல் இவ்வாறு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.