ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் (03) அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27ஆம் திகதி அந்த விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் தனிப்பட்ட காரணங்களால் வருகை தர முடியாத நிலையில், இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு அவரது சட்டத்தரணி மூலமாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அவகாசத்திற்குப் பின்னர், இன்றைய தினம் அவர் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660