2026-T20 உலகக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டது

2026 ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்கான கிண்ணம் நேற்று (பிப்ரவரி 1) மாலை 3.15 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன் T20 உலகக்கிண்ணம் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாநகர சபை முதல்வர் கெளரவ மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு உலகக்கிண்ணத்தினை பார்வையிட்டனர். இதேவேளை, விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கிண்ணத்தை நேரில் காண மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலாச்சார நடனங்களும் இடம்பெற்று, சிறப்பான வண்ணம் கூட்டத்தை நன்கு எழுச்சியூட்டியது. தொடரை நடாத்தும் நாட்டாக இலங்கையில் உலகக்கிண்ணத்தை அறிமுகம் செய்த பின்னர், இக்கிண்ணம் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக்கிண்ணத்தை நேரில் காணும் வாய்ப்பை வழங்கும் நோக்கில், இந்த காட்சிப்படுத்தல் விழிப்புணர்வு மற்றும் உற்சாகத்தை உருவாக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660