உள்நாடு
Feb 01, 2026
கம்பஹாவில் ரயில் விபத்து அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
கம்பஹா பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின்னர் சடலம் கம்பஹா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.