இலங்கையில் எரிபொருள் சந்தையில் புதிய விலை நிலவரம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் புதிய திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று(31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலை லீட்டருக்கு ரூ. 2 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள்:
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்
முன்னைய விலை : ரூ. 294.00
குறைப்பு : ரூ. 2.00
புதிய விலை : ரூ. 292.00
லங்கா ஓட்டோ டீசல்
முன்னைய விலை : ரூ. 279.00
குறைப்பு : ரூ. 2.00
புதிய விலை : ரூ. 277.00
இதனைத் தவிர, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவை முன் நிலவிய விலைகளிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மாற்றமின்றி தொடரும் எரிபொருள் விலைகள்:
லங்கா பெட்ரோல் 95 ஒக்டேன் யூரோ 4 : ரூ. 340.00
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 : ரூ. 323.00
லங்கா மண்ணெண்ணெய் : ரூ. 182.00
இந்த புதிய விலைத்திருத்தம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.