பந்தர் அப்பாஸ் நகரில் திடீர் வெடிப்பு காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை

ஈரானின் வளைகுடா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று பலத்த வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்ப தகவல்களின்படி, வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹார்மோஸ்கான் மாகாண பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ர்தாத் ஹசன்சாதே கூறுகையில், இந்த வெடிப்பு குறித்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சேவையினரால் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர், என தெரிவித்தார். இதுவரை உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.மேலும் அமெரிக்கா ஈரான் இடையே அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை IRGC அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

இதனிடையே, தனி சம்பவமாக தென்மேற்கு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள அஹ்வாஸ் நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660