தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எதிர்பாராத விதமாக கடும் சரிவு
இன்றைய நாளின் தரவுகளின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.மேலும் இது நேற்றைய தின விலையுடன் ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும். சதவீத அடிப்படையில் இந்த சரிவு 8.15% என கணக்கிடப்பட்டுள்ளது.அதேபோன்று, வெள்ளி சந்தையிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் தற்போதைய விலை 85.34 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதுடன், இது முந்தைய நாளைவிட 29.16 அமெரிக்க டொலர் குறைவாகும். சதவீத ரீதியாக இந்த வீழ்ச்சி 25.46% ஆகும்.இந்த திடீர் விலை சரிவின் காரணமாக, கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு முதலீடுகள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வர்த்தக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், தற்போதைய நாளில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்னும் இரட்டிப்பு உயர்மட்டத்திலேயே நிலைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.