துப்பாக்கி அனுமதிப்பத்திரப் புதுப்பிப்பு இன்று இறுதி நாள் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி, துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க வேண்டிய இறுதி நாளாக இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும்
குறித்த காலக்கெடுவுக்குள் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அபராதத் தொகையைச் செலுத்தி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க வேண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் கூட அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கத் தவறும் அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களுக்கும் எதிராக, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருந்தமை தொடர்பில், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைவாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.