திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ரிட் மனு உத்தரவு அறிவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில், பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

இந்த மனுவிற்கான உத்தரவு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நேற்று அறிவிக்கப்படவிருந்தது. எனினும், வழக்குத் தொடர்பான உத்தரவு இன்னும் தயாராகவில்லை என தலைமை நீதியரசர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உத்தரவு எதிர்வரும் 3ஆம் திகதியில் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.மேலும், அதற்கு முன்னதாக உத்தரவைத் தயார் செய்ய முடிந்தால், எதிர்வரும் திங்கட்கிழமை அதனை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு அறிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660