பாடசாலைகளில் பரவும் மாவா மற்றும் பாபுல், விசாரணைகள் தீவிரம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர், ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென தெரிவித்துள்ளார். மேலும்போதைப்பொருள் பாவனையானது பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வருவது குறித்தும் பொலிஸார் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார் குளிர்பானம், பஞ்சு மிட்டாய், மற்றும் டொபி, பிஸ்கட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ் அறிவிப்பானது செவ்வாய் கிழமை (27) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெளிவுபடுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மெழுகு இது தொடர்பில் ஏற்கனவே 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.